ஒரு நாட்டில் பிரெச்சனை இருக்கும் பொழுது ஒரு வீட்டில் பிரெச்சனை காண்பது அரிது.

எந்த நாட்டில் வெளி நாட்டின் தலையீடு  குறைவாக இருக்கிறதோ அந்த நாட்டில் உள்நாட்டு பிரேச்சனைகள் காண்பது அதிகம்.

எந்த நாட்டில் இவ்வனைத்தையும் பூசி மொழுகி சமாளிக்க திறன் உள்ளதோ அங்கு அடுத்து என்ன செய்வது என்று எண்ணம் தோன்றும்.

வெளியே சண்டை போட இடம் இல்லாததால் வீட்டில் சண்டை போடலாமே என்ற எண்ணம் வரும்.  

மனம் இங்கும் அங்கும் என காரணம் தேடும்
எண்ணங்கள் பரிமாற்றம் என்ற பெயரில் வாதம் வலுக்கும் 
வார்த்தைகள்   வெடிக்கும்
பல இதயங்கள் உடையும் 
இதுவும் ஒரு வகை போர் தானே!

எண்ணங்கள் தாவின வார்த்தைகள் தாவின மனங்கள் தாவின இப்படி தாவி தாவி பல பெரும் குடும்பங்கள் இன்று ஒற்றை மரம் ஆகின.
இப்பொழுது புரிகிறதா  மனிதனின் மனதை ஏன் குரங்குடன் ஒப்பிடுகிறார்கள்!
ஆனால் அந்த குரங்குகளுக்கும் நமக்கும் ஒரு வித்யாசம் உண்டு. எவ்வளவு தாவினாலும் இன்றும் அவைகள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்து வருகின்றது(காடுகளில்).

In simple words,
The Earth first formed, there was one huge mass. The mass divided into continents, the continents to countries, countries to states, states to city, city to divisions,divisions to streets, streets to families. Now families to individuals...

Comments are closed.